உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு இயற்கை சுற்றுலா

மாணவர்களுக்கு இயற்கை சுற்றுலா

கள்ளக்குறிச்சி: பழங்குடியினர் நலப்பள்ளி மாணவர்களுக்கு, கல்வராயன்மலை இயற்கை சுற்றுலாவை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியை வழங்கும் வகையில் இயற்கை சுற்றுலா துவக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அவர் பழங்குடியினர் நலப்பள்ளி மாணவர்களுக்கான, கல்வராயன்மலை இயற்கை சுற்றுலாவை துவக்கி வைத்தார்.இதில், மூன்று பழங்குடியினர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த, 90 மாணவ-மாணவியர், 10 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த சுற்றுலாவில் பள்ளி மாணவர் சுற்றுச்சூழல் நடை பயணம், விதை பந்து தயாரித்தல், பல்லுயிர் அனுபவம், மரம் நடுதல், இயற்கை ஆவணப்படம் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ