மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு
20-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் என்.சி.சி., துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாக தலைவர் ரவிக்குமார், துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக என்.சி.சி., கமாண்டிங் கர்ணல் சக்ரவர்த்தி பங்கேற்று, குத்து விளக்கேற்றி தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) துவக்கி வைத்தார். தொடர்ந்து, என்.சி.சி., குறித்தும், அதில் மாணவர்கள் சேருவதன் அவசியம் குறித்தும், பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், ரத்த தானம், சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு பிரசாரங்கள், முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் என்.சி.சி., மாணவர்களின் பங்கு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் என்.சி.சி., பெண்கள் பயிற்றுனர் தேவசேனா, பட்டாலியன் ஹவில்தார் செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
20-Jul-2025