மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: அ.தி.மு.க., வழங்கல்
08-Jun-2025
திருக்கோவிலுார்:திருக்கோவிலுாரில் தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு நகை கடன் தர மறுக்கும் தி.மு.க., அரசிற்கு, கண்டனம் தெரிவிப்பதாக கூறி, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அஷ்ரப் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கருணாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை தாங்கி, பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், மும்மூர்த்தி, பன்னீர்செல்வம், சரவணன், ஏழுமலை, நகர அவை தலைவர் சங்கர், பொருளாளர் அண்ணாமலை, நகர துணை செயலாளர் வீரவேல், ஒன்றிய அவைத் தலைவர்கள் வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தயாநிதி நன்றி கூறினார்.
08-Jun-2025