ஆங்கில மொழிக்கு சிறப்பு வகுப்பு வேண்டும்
கடந்த 1993 - 1998 வரை இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். திறமையான ஆசிரியர்கள் கல்வி கற்று கொடுத்ததால், சேலம் மத்திய சட்டக் கல்லுாரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக சமூக பொறுப்புடன் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறேன். திறமையான ஆசிரியர்களை கொண்டு பல திறமையான மாணவர்களை உருவாக்கிய பெருமை மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உண்டு. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஏரோநாட்டில் இன்ஜினியர், தகவல் தொடர்பு துறையில் சார்ட்டட் அக்கவுண்டர் மற்றும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறனர். வருங்காலங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் மென்மேலும் சிறப்பான முறையில் முயற்சி மேற்கொண்டு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களுடன் போட்டி போடும் வகையில் சிறப்பான கல்வியும், திறமையையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆங்கில மொழி கல்விக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். செந்தில் அரசு, வழக்கறிஞர். சங்கராபுரம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர்.