உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியத்தில், ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி மைய திறப்பு விழா நடந்தது. தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். புதிய மையத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து சீருடை, புத்தகங்களை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகிகள் இதயதுல்லா, சின்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை