உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழா செய்தி துளிகள்

 கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழா செய்தி துளிகள்

ரோடு ஷோ நடத்திய முதல்வர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் திறக்க நேற்று வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திம்மலை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட தி.மு.க., சார்பில் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, வேனில் இருந்து கையசைத்தபடி, நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றார். அதைத்தொடர்ந்து தொண்டர்கள் முண்டியடித்து கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தனர். பொதுமக்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட ஸ்டாலின் வேனில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்று ரோடு ஷோ மூலம் பெண்களுக்கு கைக்கொடுத்தார். புவிசார் குறியீடு சிலை பரிசு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சியின் அடையாளமாக உள்ள புவிசார் குறியீடு பெற்ற மரசிற்ப வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்ட நின்ற வடிவிலான திருவள்ளுவர் சிலையை கலெக்டர் பிரசாந்த் நினைவு பரிசாக வழங்கினார். அதேபோல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அமர்ந்த வடிவிலான திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. தாமதத்தை உணர்ந்து பேச துவங்கிய முதல்வர் முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று ரோடு ஷோ நடத்தியதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் விழா மேடைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. விழா மேடைக்கு பகல் 12.00 மணிக்கு முதல்வர் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், 12.50 மணிக்கு வந்தார். விழா மேடையில் கலெக்டர் பிரசாந்த் வரவேற்புக்கு அடுத்து அமைச்சர் வேலு பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர தாமதத்தை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தனது பேச்சை துவங்கினார். ஆன்மிகத்தை அடிக்கோடிட்டு பேசிய முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறினார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற ஆன்மீக தலமாக உள்ள திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள், வீரட்டானேஸ்வரர் கோவில், ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் என ஆன்மிகம் நிறைந்த மாவட்டமாக கள்ளக்குறிச்சி உள்ளது என்று குறிப்பிட்டதும் பார்வையாளர்கள் தரப்பில் பலத்த கரகோஷம் எழுந்தது. திட்டத்தை சொல்லி மூச்சு வாங்கிய முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது கடந்த 4 ஆண்டுகளில் செய்து முடித்த திட்டங்களின் விபரத்தை பட்டியலிட்டு பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி புள்ளி விபரங்களுடன் விரிவாக பேசினார். திட்டங்களை முழுவதுமாக கூறுவதற்குள் மூச்சு வாங்குகிறது, அவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தண்ணீர் குடித்து ஆசுவாச படுத்திக்கொண்டு பேச்சை தொடர்ந்தார். முதல்வரின் ஓப்பன் சேலஞ்ச் முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசி விட்டு, இது போன்ற எந்தவொரு மக்களுக்கு பயனளிக்கும் திட்டமும் அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தவில்லை. தற்போது நடைமுறைபடுத்தியுள்ள திட்டங்களில் 5 சதவீதத்தை கூட கடந்த ஆட்சியில் செய்யவில்லை. இதனை ஓப்பன் சேலஞ்ச் செய்து சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை விழாமேடைக்கு செல்லும் வழியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர்கள் வழங்குவதற்காக நிறுத்தப்பட்டு, அதில் மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்த பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேடைக்கு செல்வதற்கு முன்பாகவே திட்ட உதவிகளை வழங்கினார். கண்காட்சி அரங்கை பார்வையிட்ட முதல்வர் விழா மேடைக்கு அருகே தமிழக மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வராயன்மலை வளர்ச்சி திட்டங்கள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், அரசு துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். மகளிருக்கு முக்கியத்துவம் விழா அரங்கில் அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள் அமர வைக்கப்பட்டனர். இதில், உரிமைத்தொகை பெறும் பயனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்ற திட்டங்களில் பயன்பெறும் மகளிர் என 70 சதவீதம் பெண்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆண்களை விட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ