உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வட மாநில வாலிபர் இறப்பு போலீசார் விசாரணை

வட மாநில வாலிபர் இறப்பு போலீசார் விசாரணை

சங்கராபுரம்: ச ங்கராபுரம் அருகே கரும்பு வெட்டும் பணி செய்த மத்திய பிரதேச வாலிபர் இறப்பு குறித்து போலீசார் விசாரிக் கின்றனர். மத்தியபிரதேச மாநிலம், கார்க்கோன் மாவட்டத்தை சேர்ந்த ஓம்கார் மகன் பர்வீன், 28; இவர் சங்கராபுரம் அடுத்த கல்லேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவரது நிலம் அருகே தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார். பர்வீனுக்கு டிபி நோய் இருந்தது. கடந்த 31ம் தேதி காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட பர்வீன், கரும்பு வெட்டும் விவசாய நிலத்திலேயே இறந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., நிமிலன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை