உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழா

கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழா

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். விழாவில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஊட்டச்சத்து முக்கியத்துவதை விளக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் துவக்கி வைத்து, கண்காட்சி அரங்குகள் திறந்து வைக்கப்பட்டன. இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், 6 மாத குழந்தையின் உணவூட்ட முறைகள், தாய்பாலின் நன்மைகள், குழந்தைகளுக்கு வழங்கக் கூடாத உணவுகள், உடல் பருமனை குறைப்பதற்கான பானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் அருணா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பிரியதர்ஷினி, நிரஞ்சனா, கல்பனா உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை