உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் அனுசரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லறை நாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை விழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஆற்காடு லுாத்தரன் திருச்சபைக்கு சொந்தமான கல்லறை தோட்டம் நேற்று முன்தினம் சுத்தம் செய்யப்பட்டது.தொடர்ந்து, நேற்று மாலை 5:00 மணியளவில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்திற்கு சென்று தங்களது முன்னோர்கள், உறவினர்களின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.அதேபோல், ரிஷிவந்தியம் அடுத்த சூ.ராயபுரம், தொண்டனந்தல் மற்றும் மையனுார் ஆகிய கிராமங் களிலும் கல்லறை திருவிழா அனுசரிக்கப்பட்டது.

செஞ்சி

செஞ்சி, கிருஷ்ணாபுரம், ஆலம்பூண்டியில் உள்ள கல்லறைகளில் திருப்பலி நிறைவேற்றி கல்லறைகளை தீர்த்தம் தெளித்து துாய ஆராதனை செய்தனர்.அணிலாடியில் கல்லறையில் இறந்தவர்களின் உறவினர்கள், மூதாதயர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.

சின்னசேலம்

கூகையூர் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் திரண்டு, முன்னோர்களின் நினைவிடங்களில் மலர் துாவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ