மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களின் மாவட்ட கலை திருவிழா
18-Nov-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில், துணை கலெக்டர் மற்றும் தாசில்தார்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 12 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 15 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ, மாணவியர் விடுதி என மொத்தம் 27 பள்ளி, கல்லுாரி விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் துணை கலெக்டர் மற்றும் தாசில்தார்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, விடுதி பணியாளர்கள், மாணவர்களின் வருகை, வழங்கப்படும் உணவு, குடிநீர், சுகாதாரம், தொலைக்காட்சி, நுாலகம், தீயணைப்பான்கள், தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள், சமையல் பாத்திரங்கள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விடுதிகளில் உணவு, குடிநீர், உணவு பொருட்களின் இருப்புப் பதிவேடு, உணவின் தரம் உள்ளிட்டவை குறித்தும் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து விடுதியில் மாணவர்களுக்கு தொடர்ந்து தரமான சேவை கிடைப்பதை காப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
18-Nov-2024