உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் அரசு பதிவு பெற்று செயல்பட அறிவுறுத்தல்

முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் அரசு பதிவு பெற்று செயல்பட அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதியோர், மனவளர்ச்சி குன்றிய, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், ஆகியவை அரசு பதிவு மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள் உடனடியாக பதிவு செய்து விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. அந்தந்த பிரிவு சார்ந்த இணையத்தள முகவரிகள் அல்லது முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில நல ஆணையம், அரசு மனநல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை