மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
28-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஓட்டல் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் நிறுத்த பகுதியில் ஓட்டலில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளர் ராஜாம்பாள் நகரை சேர்ந்த பாபு, 43; என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு புகையிலை பொருட்களை சப்ளை செய்த செம்பராம்பட்டு மூர்த்தி மனைவி சந்திரலேகா, 32; என்பவரை தேடி வருகின்றனர்.
28-Feb-2025