உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் கடத்தல் ஒருவர் கைது

மதுபாட்டில் கடத்தல் ஒருவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஆட்டோவில், 250 மதுபாட்டில்களை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் பொய்க்குணம் கிராமத்தில் நேற்று மாலை ரோந்துசென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. ஆட்டோ டிரைவரை பிடித்து, விசாரித்தனர். அவர், பொய்குணத்தை சேர்ந்த வேலன் மகன் மோகன்,37; என்பதும், அதே கிராமத்தை சேர்ந்த சாமுண்டி மகன் ரவி என்பவருடன் இணைந்து, மதுபாட்டில்களை விற்க திட்டமிட்டதும் கண்டறியப்பட்டது.அவரை கைது செய்த போலீசார், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள, 250 குவாட்டர் பாட்டில்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ரவி மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை