உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கல்லுாரி பயிற்றுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் துறை சார்பில் நடந்த பயிற்சி முகாமிற்கு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் அறிவொளி தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மையம் கடன் வழிகாட்டுபவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கல்லுாரியில் உள்ள 26 பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.பயிற்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தில் உள்ள திட்டங்கள், தொழில் முனைதல் மற்றும் புத்தாக்கம் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசி, திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், இத்திட்டங்களை குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, தொழில் முனைவோராக மாற்ற ஊக்குவிக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை