உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டம்

பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டம் நடந்தது பயிற்சி கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் அங்கம் வகிக்கும் பெண் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல், கிராம பஞ்சாயத்துகளை சுயாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றுதல், வளர்ச்சி திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, கிராம சபை கூட்டங்களின் பங்களிப்பை அதிகரித்தல், வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு தவிர்த்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், மாவட்ட வள மைய அலுவலர் உத்திராபதி, வட்டார வள மைய அலுவலர் வெங்கடாசலம், மண்டல பயிற்றுநர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி