உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

லாரி தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்த சம்பவத்தில், தீக்காயமடைந்தவர் நேற்று இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுஎடையாரை சேர்ந்தவர் அண்ணாதுரை, 54; தனது லாரியின் முகப்பு விளக்கு பழுதினை சரிசெய்வதற்காக கடந்த 28ம் தேதி கள்ளக்குறிச்சி யில் உள்ள பேட்டரி கடைக்கு லாரியை கொண்டு வந்தார். கடை ஊழியர்கள் அண்ணா நகரை சேர்ந்த சிவா, 27; ஊராங்கனியை சேர்ந்த விஜயகுமார், 37; ஆகியோர் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, தீப்பிடித்து எரிந்த லாரியின் டீசல் டேங்க் வெடித்தது. இந்த விபத்தில், சிவா, குமார் ஆகிய இருவரது உடலிலும் தீ பரவியது. இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா நேற்று உயிரிழந்தார். விஜயகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை