உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கத்தியால் தாக்கியதில் ஒருவர் காயம்

கத்தியால் தாக்கியதில் ஒருவர் காயம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கத்தியால் தாக்கியதில் கூலித்தொழிலாளி காயம் அடைந்தார். கள்ளக்குறிச்சி, செம்மனங்கூரையை சேர்ந்தவர் நாகப்பன் மகன் செல்லமுத்து, 34; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அருகே உள்ள அண்ணாதுரை என்பவரின், தர்பூசணி பழக்கடையில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த கலீம் மகன் ஆசிப், 37; என்பவர், கடைக்காரரிடம் கேட்காமல் தர்பூசணியை எடுத்தார்.இதனால், அவருக்கும் கடை உரிமையாளர் அண்ணாதுரைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு நின்றிருந்த செல்லமுத்து இருவரையும் சமாதானம் செய்தார். இதனால் கோபமடைந்த ஆசிப் அசிங்கமாக திட்டி, கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்லமுத்துவின் காது பகுதியில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆசிப் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !