மேலும் செய்திகள்
தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்
01-Oct-2025
தியாகதுருகம் : தியாகதுருகம் புறவழி சாலையில் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் தடுப்பு கம்பியில் மோதி இறந்தார். தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் செந்தில், 40; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தியாகதுருகம் புறவழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வடதொரசலுார் நோக்கி சென்றார். அளவுக்கு அதிகமான போதையில் நிலை தடுமாறி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை கம்பியில் மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Oct-2025