உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துணை சுகாதார நிலையம் திறப்பு

துணை சுகாதார நிலையம் திறப்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.சங்கராபுரம் பேரூராட்சி காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ரு.17 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தலைமை தாங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்,ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக உதயசூரியம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து,பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பி.டி.எ., தலைவர் கமருதீன்,நகர செயலாளர் துரை,வார்டு கவுன்சிலர்கள் கோபு,உமா மகேஸ்வரி,பரிதா ஆரோக்கியம், வக்கீல் சதாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை