பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை பெற வாய்ப்பு
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெறாத பயனாளிகள் அலுவலர்களை அணுகி கருத்துரு அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிர்வுத் தொகை பெறாத பயனாளிகள் மொத்தம் 681 பேர் உள்ளனர். இப்பயனாளிகள் இடம் பெயர்ந்து வெளியூர் சென்றதால், வட்டார விரிவாக்க அலுவலர்கள் மூலம் கண்டறிய இயலவில்லை. இவர்களின் விபரம், https://kallakurichi.nic.in, எனும் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் மாவட்ட இணையதளத்தில் விவரங்களை உறுதி செய்து, உரிய சான்றுகளுடன் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகி கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட வைப்பு தொகை ரசீது, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பயனாளியின் வண்ணப் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கருத்துருவுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.