உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சந்தப்பேட்டையில் நுண்ணுயிர் உரம் செயலாக்க மையம் கட்ட எதிர்ப்பு

சந்தப்பேட்டையில் நுண்ணுயிர் உரம் செயலாக்க மையம் கட்ட எதிர்ப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சந்தப்பேட்டை அம்பேத்கர் நகரில் நுண்ணுயிர் உரம் செயலாக மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் சந்தப்பேட்டை, அம்பேத்கர் நகரில் நுண்ணுயிர் உரம் செயலாக்க மையம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கர் நகர் மக்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர். இப்பணி மீண்டும் துவங்கப்படவுள்ளதை கண்டித்து, அனைத்து கட்சி சார்பில் நேற்று தாலுக்கா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆளும் தி.மு.க., வை தவிர்த்து அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டு நுண்ணுயிர் உரம் செயலாக்க மையம் கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை