| ADDED : நவ 09, 2025 06:32 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவருக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சியிலும், தலா ஒருவர் வீதம் மொத்தம் 50 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒரு ஒன்றிய உறுப்பினர் பதவியிடத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்து, அனைத்து பதவியிடங்களுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டது. சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, நியமன ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தாகம்தீர்த்தாபுரம் ஊராட்சி ராமசாமி என்பவருக்கு ஆணை வழங்கினார். பி.டி.ஓ., சவரிராஜ், துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் சோளமுத்து, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர் ஆறுமுகம், பழனிவேல், நிர்வாககிகள் அன்பரசு, ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.