உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீசை கண்டித்து பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

போலீசை கண்டித்து பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ; போலீசாரை கண்டித்து தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த பனையேறி பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைமணி, செயலாளர் கலியமூர்த்தி, பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தென்னை மரத்தில் இருந்து 'கள்' இறக்கி விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசாரை கண்டித்தல், வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருகன், சுரேஷ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'கள்' இறக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் முருகன், ராஜா, கார்த்திக், செல்வம், அய்யம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை