உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு நடத்தப்பட்ட நேர்காணல் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் நிலையில் காலியகாக உள்ள ஒரு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு டிச., 11 ம் தேதி அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தின் இணையதளமான https://www.kallakurichi.nic.inமற்றும் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் www.ncs.gov.inவெளியிடப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட நேர்காணல் ஆகியவை நிர்வாக காரணங்களாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை