சங்கராபுரத்தில் அமைதி பேரணி
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ், 34 வது நினைவு நாள் அமைதி பேரணி நடந்தது.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, மாவட்ட துணை தலைவர் இதயதுல்லா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், வக்கீல் பாஷா, வட்டார தலைவர்கள் செல்வராஜ், பிரபு, மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆதில்கான் முன்னிலை வகித்தனர்.கடைவீதி மும்முனை சந்திப்பில் ராஜிவ் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கோவிந்தராஜ், நவாஸ்கான், கவுதமன், ராமு, கனக சபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.