மேலும் செய்திகள்
ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு
19-Mar-2025
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாத்துார் வழியாக எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்கு பஸ்களை இயக்காததால், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில், மேலுார் துணை சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் மலைக்கோட்டாலம், ஆலத்துார், எடுத்தவாய்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.இதில் கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிகம், மாத்துார், மண்மலை, க.செல்லம்பட்டு, கரடிசித்துார், தாவடிப்பட்டு, பால்ராம்பட்டு, மாதவச்சேரி, செம்படாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிகிச்சைக்குகர்ப்பிணிகள் சிகிச்சை, பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காக அங்கேயே வர வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி, முதியவர்கள் சிகிச்சை
கருவுற்ற நாள் முதல் கிராமப்புற செவிலியர்களிடம் பதிவு செய்த பின், மாதந்தோறும் பரிசோதனைக்கு வருகின்றனர். அங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில், பிரத்யேகமாக கர்ப்பிணிகளுக்கு தைராய்டு, ரத்தசோகை, ரத்த இழுத்தம், சர்க்கரை அளவு, தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் வளர்ச்சி மற்றும் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் முதியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் சரிவிகித உணவுகள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.அங்கு, 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. தினசரி 5,க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் நடக்கிறது. குழந்தைகளுக்கு அம்மைநோய், மஞ்சள் காமாலை, போலியோ உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தினமும், 300க் கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் முதியவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம், யானைக்கால் நோய் உள்ளிட்டவைகளுக்கு தொடர் சிகிச்சை, மாதாந்திர மாத்திரைகள் வாங்க வருகின்றனர்.அதுமட்டுமின்றி, எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி, மத்திய அரசு உண்டு உறைவிட பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் உள்ளன. மேலும் அங்கு துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்திற்கு மாத்துார், மண்மலை, செல்லம்பட்டு, கரடிசித்துார், பால்ராம்பட்டு, தாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் எடுத்தவாய்நத்தம் செல்ல கச்சிராயபாளையம் சென்று, அங்கிருந்து மாற்று பஸ்களில், குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், 15 கி.மீ., சுற்றி, 2 பஸ்கள் மாறி செல்கின்றனர். மக்கள் அவதி
அதனால் மாத்துார் வழியாக பஸ்களை இயக்கினால் மக்கள், 3 கி.மீ., துாரத்தில் எடுத்தவாய்நத்தத்தை சென்றடைய முடியும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் மக்கள் மாத்துார் வழியாக நடந்து செல்கின்றனர்.முதியவர்கள், கர்ப்பிணிகள் மழை மற்றும் வெயில் நேரங்களிலும் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.அங்கு பணிபுரியும் பணியாளர்கள், செவிலி யர்கள், ஆஷா பணியாளர்களும் முறையான பஸ் வசதி இல்லாததால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இது குறித்து, கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
19-Mar-2025