மேலும் செய்திகள்
தொண்டி தெருக்களில் நாய்கள் தொல்லை
26-Sep-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி- நகராட்சியில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெருக்களில் நடமாட மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது. சில மாதங்களாக கள்ளக்குறிச்சி- பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு நாய்களே தென்பட்ட நிலையில், தற்போது 20க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.தெருவில் நடந்து செல்லும்போது மிகவும் கவனமுடன் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்களில் சென்றாலும் விரட்டுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நீண்ட துாரம் விரட்டிச் செல்கின்றன. பகல் நேரங்களிலேயே தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. இதனால் பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வரை அனைவரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.கழிவு பொருட்களை கிளறி ரோட்டில் இழுத்துப் போடுகின்றன. எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Sep-2024