உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டு பாலத்தில் வாகன போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

மூங்கில்துறைப்பட்டு பாலத்தில் வாகன போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உயர் மட்ட பாலம் கடந்த ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் வடக்கு பக்கம் உள்ள திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள வாழவச்சனுாரில் 100 மீட்டர் துாரம், பாலத்துடன் இணைக்கும் இணைப்பு சாலை அமைக்க நிலம் கையப்படுத்தப்படவில்லை. இதனால் பாலத்தின் வடக்கு பக்கம் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், பழைய பாலம் வழியாக போக்குவரத்து நடக்கிறது. நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், மூங்கில்துறைப்பட்டில், பழைய பாலம் வழியாக குறுகிய சாலையில் நுழையும் போது, திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி எதிரில் வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. கட்டி முடித்த புதிய பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாதபடி பேரி கார்டு அமைத்து தடை ஏற்படுத்தி உள்ளனர். பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைத்து புது பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை