உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் முயற்சி

குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் முயற்சி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் ஊராட்சிக்கு உட்பட்டது அணைக்கட்டு குடியிருப்பு பகுதி. இங்கு கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திருக்கோவிலுார் -திருவெண்ணைநல்லுார் மார்க்கத்தில் செல்லும் பஸ்சை மறித்து மறியல் செய்ய முயன்றனர்.தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோவிலுார் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட சிறு சிக்கல்தான் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை