உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமங்கலம் அரசு பள்ளி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு

பெருமங்கலம் அரசு பள்ளி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: பெருமங்கலம் அரசு பள்ளியில் ரூ.27.96 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய பொதுநிதி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. மேலும், பிரதமர் கனிஜ் ஷேத்ர கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.19.46 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து கூறியதாவது; பள்ளியில் கட்டுமான பணிகள் துவங்கிய காலம், பணி முடிவடையும் காலம், திட்ட மதிப்பீடு, பணிகளின் தரமாக நடைபெறுகிறதா, மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் செயல்பாடு, பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின் போது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி