உள்ளூர் செய்திகள்

மனைப்பட்டா வழங்க மனு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகில், வீட்டு மனை பட்டா தொடர்பாக ஒன்றிய சேர்மனிடம் மக்கள் மனு அளித்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா, வடகுறும்பூர் கிராமத்தில், கடந்த, 30ஆண்டுகளுக்கு மேலாக, 40க்கும் மேற்பட்டோர், குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதுவரை அவர் களுக்கு, வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில் ஒன்றிய சேர்மன் ராஜவேலிடம், அப்பகுதி மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அமைச்சரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ