மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
07-Dec-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் பெஞ்சல் புயல் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.கலெக்டர் பிரசாந்திடம் அளித்துள்ள மனு:பெஞ்சல் புயல் மழை காரணமாக கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் 17 கூரை மற்றும் ஓட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து முற்றிலுமாகவும், சுவர் இடிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளது.சடையம்பட்டு, விளம்பார், கூத்தக்குடி, கொங்கராயபாளையம் காலனி, உலகங்காத்தான் காலனி, நல்லாத்துார், கனியாமூர், வாணவரெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட இவர்களின் வீடுகளை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக மத்திய, மாநில அரசு திட்டங்களின் மூலம் காங்கிரீட் வீடுகள் அமைத்து தர ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
07-Dec-2024