மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மனு
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன், பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமையில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று நலத்திட்டங்களை வழங்கிய தமிழக அரசுக்கும், கலெக் டர் பிரசாந்த், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணிக்கும் நன்றி, சமூகநலத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் முறையாக வழங்குவது இல்லை, எனவே தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கலெக்டரை சந்தித்துகோரிக்கை மனு அளித்தனர்.இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.