உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அடிப்படை வசதி கோரி சேர்மனிடம் மனு

 அடிப்படை வசதி கோரி சேர்மனிடம் மனு

சங்கராபுரம்: பூட்டை கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய சேர்மனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கராபுரம் ஒன்றியம் பூட்டை ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி மக்கள் பல்வேறு பிரச்னைக்கு ஆளாகி வந்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பூட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கிராம மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ