மேலும் செய்திகள்
பாலத்தில் மண் குவியல் அகற்ற நடவடிக்கை தேவை
30-Sep-2024
கள்ளக்குறிச்சி : கடந்த சில தினங்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் மழை பெய்துவரும் நிலையில் சாலை முழுவதும் மண் குவியல்கள் மண்டிக்கிடக்கிறது. தியாகதுருகம், சேலம் சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுதியான சாலையாக விளங்கி வருகிறது. தற்போது சாலையில் பரவியுள்ள மண் குவியலால் புழுதி பறக்கிறது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பலர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலைகளில் அதிகளவில் பரவிகிடக்கும் மண் குவியல்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Sep-2024