உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோ வழக்கில் கைதானவர் தடுப்பு காவலில் சிறையில் அடைப்பு

போக்சோ வழக்கில் கைதானவர் தடுப்பு காவலில் சிறையில் அடைப்பு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை அனைத்து மகளிர் போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சங்கராபுரம் அடுத்த பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; கடந்த மாதம் 8ம் தேதி 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, விழுப்புரம், வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கப்படும் செயலில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்பதால் சிவகுமாரை தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., மாதவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், சிவக்குமார் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருக்கோவிலுார் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வேடம்பட்டு சிறையில் வழங்கியதைத் தொடர்ந்து, சிவக்குமார் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை