உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சிறுமியை கடத்தி செல்ல முயன்ற வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் சேர்ந்த செல்லமுத்து மகன் ராஜ்சக்தி, 27; இவருக்கு விவாகரத்து ஆனவர். தனியார் பள்ளி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளிடம் பழகுவதை தவிர்க்குமாறு ராஜ்சக்தியை பல முறை எச்சரித்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி சிறுமியின் கிராமத்திற்கு சென்று, சிறுமியை கடத்தி செல்ல ராஜ்சக்தி முற்பட்டார். சிறுமியின் பெற்றோரை கண்டதும் அங்கிருந்து ராஜ்சக்தி தப்பினார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜ்சக்தி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ