உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிரம்! 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிரம்! 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.இதனால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலை சாதகமாக்கி திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், மணிக்கூண்டு பகுதி என 2 இடங்களில் உயர்கோபுர கண்காணிப்பு கூண்டுகள் அமைத்துள்ளனர்.அதேபோல், திருக்கோவிலுாரில் 3, சங்கராபுரத்தில் 1, மணலுார் பேட்டையில் 1, உளுந்துார்பேட்டையில் 1, சின்னசேலத்தில் 1, தியாகதுருகத்தில் 1 என மொத்தம் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோபுரங்களில் காலை முதல் இரவு வரை போலீசார் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் கிராமப்பகுதிளிலும் தலா 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்களை ஒலி பெருக்கி மூலம் எடுத்துக்கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் அந்தந்த பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கூடுதலாக ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினருடன் இணைந்து மொத்தம் 600 பேர் மாவட்டம் முழுதும், பண்டிகைக்கால போக்குவரத்து சீரமைப்பு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் மாவட்டம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை