மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் தேன் கூடு அகற்றம்
24-Apr-2025
தேனீக்கள் கொட்டி 20 மாணவர்கள் காயம்
23-Apr-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்தபுதுபாலப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து ஊழியர்கள் வகுப்பறை மற்றும் அலுவலகத்தை பூட்டி சென்றனர்.நேற்று காலையில் பள்ளியை திறந்தபோது, 3 வகுப்பறைகளில் இருந்த நாற்காலி, மேஜை, மின் விசிறி, பாத்ரும் கதவு, ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவை உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
24-Apr-2025
23-Apr-2025