மேலும் செய்திகள்
ஆடு, மாடுகள் திருட்டு விவசாயிகள் அச்சம்
08-May-2025
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 46; விவசாயி. இவர், 2 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 30ம் தேதி அதிகாலை 2:15 மணியளவில், ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, சீனிவாசன் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார்.அப்போது, வெள்ளை நிற காரில் மர்மநபர்கள், ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது. மேலும், அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடும் திருடு போனது.இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து காரில் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
08-May-2025