உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேர் திருவிழாவில் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்ட தாய்க்கு போலீஸ் வலை

தேர் திருவிழாவில் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்ட தாய்க்கு போலீஸ் வலை

சங்கராபுரம் : தேர் திருவிழாவில், பச்சிளம் குழந்தையை தவிக்க விட்ட தாயை போலீசார் தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி,50; இவர் நேற்று முன்தினம் இரவு விரியூர் கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய தேர் விருவிழாவிற்கு சென்றார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தான் வைத்திருந்த பச்சிளம் ஆண் குழந்தையை, சற்று நேரம் வைத்திருக்குமாறும், கழிவறைக்கு சென்று வருவதாகவும் கூறி, குழந்தையை கொடுத்து விட்டு சென்றார். வெகு நேரமாகியும், குழந்தையை வாங்கிச் செல்ல அந்த பெண் வரவில்லை.அதிர்ச்சியடைந்த பத்மாவதி, விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் விவரத்தை கூறினார்.அவர்கள், குழந்தையை சங்கராபுரம் போலீசார் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தி்ல ஒப்படைத்தனர்.கோவில் திருவிழாவில், பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை