உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாலிடெக்னிக் கல்லுாரி பட்டமளிப்பு விழா

பாலிடெக்னிக் கல்லுாரி பட்டமளிப்பு விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட உதவி இயக்குனர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், சென்ற கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டய சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் கண்ணதாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை