உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்டத்தில் 4.37 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் ..

மாவட்டத்தில் 4.37 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் ..

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையொட்டி கள்ளக்குறிச்சி ராஜா நகர் கூட்டுறவு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, பன்னீர் கரும்பு மற்றம் வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பேசியதாவது; மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 180 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் என மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்ட டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 13 ம் தேதி வரை தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்படும். இன்று(10ம் தேதி) ரேஷன் கடைகள் செயல்படும். பொங்கல் பரிசு வழங்கல் தொடர்பான புகார்களை மாநில அளவிலான 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்கள், மாவட்ட அளவிலான புகார்களை 04151-228801 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். பின்னர் நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்ற பெண்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தனர். இதில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி