உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள் பஸ் நிலையத்தில் கடும் துர்நாற்றம்

பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள் பஸ் நிலையத்தில் கடும் துர்நாற்றம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தில் முறையான பராமரிப்பின்மையால் வீசும் பயங்கர துர்நாற்றத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், கடலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். வெளியூர்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நெடுந்துாரம் பயணம் செய்து வரும் பயணிகள் பயன்பாட்டிற்காக, பஸ் நிலையத்தில் 2 கட்டண கழிப்பிடங்கள் உள்ளது. இவை சரியான பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமற்ற கழிப்பிடத்தால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கடும் துர்நாற்றத்தால் கழிப்பிடம் அருகில் கூட பஸ்சுக்கு காத்திருக்க முடியவில்லை. துர்நாற்றம் பஸ் நிலையம் முழுதும் வீசுவதால் பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு காத்திருக்கின்றனர். எனவே, பயணிகள் அதிகளவில் பயன்படுத்த கூடிய கட்டண கழிப்பிடத்தை முறையாக சுத்தம் செய்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ