உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தபால் சேவை குறைதீர்வு முகாம்

தபால் சேவை குறைதீர்வு முகாம்

கள்ளக்குறிச்சி : விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24ம் தேதி தபால் சேவை குறைதீர்வு முகாம் நடக்கிறது. விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்வு முகாம் வரும் 24ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகம் சார்பில் அளிக்கப்படும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை கடிதமாக விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கே.பி.டி., வளாகம், கடலுார் ரோடு, விருத்தாச்சலம் - 606 001 என்ற முகவரிக்கு, வரும் 22ம் தேதிக்குள் மனு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை