உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்துறை மேம்பாட்டு பணிகள் : கலெக்டர் அறிவுறுத்தல்

மின்துறை மேம்பாட்டு பணிகள் : கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் மின்துறை மேம்பாடு மற்றும் கட்டுமான பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் நடக்கும் வளர்ச்சி, திட்ட பணிகள், உள்கட்டமைப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை அமைத்தல், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகளை சீரமைத்தல், மின் பகிர்மான அமைப்புகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துல், புதிய மின் பகிர்மான அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டன. மின் இணைப்பு வழங்குதல் மற்றும் கட்டணம் செலுத்தும் நடைமுறைகள், தற்போது நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து, ஆய்வு செய்து உரிய முறையில் மேற்கொள்ள அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மின்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி