உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

சங்கராபுரம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சங்கராபுரம் வட்டார கிளை செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கராபுரம் டி.எம்., பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தண்டபாணி சிறப்புரையாற்றினார். பொறுப்பாளர் ராஜாராம் ஆசிரியர் கூட்டணி செயல்பாடுகள் குறித்து பேசினார். ரமேஷ், ஷாஜகான், குபேந்திரன், தமிழரசி, யசோதா, ராஜா, அறிவொளி, ஹரிஹரன், பிரிட்டோ, மீனா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டி பிரதமருக்கு கடிதம் அனுப்புவது. எம்.பி.,யிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை