உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்று இடம் வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

மாற்று இடம் வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

கள்ளக்குறிச்சி: பிரிதிவிமங்கலத்தில் ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்காக அரசு வழங்கிய இடம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:பிரிதிவிமங்கலத்தில் வசிக்கும் எழை, எளிய ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 154 பயனாளிகளுக்கு, சம்மந்தப்பட்ட துறை சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் 2 சென்ட் பரப்பளவு கொண்ட வீட்டுமனை வழங்கப்பட்டது.ஆனால், அரசின் வளர்ச்சி பணிக்காக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை எடுத்துக் கொண்டதாக வருவாய்த்துறை அலுவலர்கள் கூறி, மனையை ரத்து செய்துள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி பிரிதிவிமங்கலம் கிராம எல்லையில் மாற்று இடம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ