உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் பஸ் டிரைவர் மாயம்

தனியார் பஸ் டிரைவர் மாயம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மாயமான தனியார் பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரை சேர்ந்தவர் ராஜா மகன் சேகர்,41; இவர், அதே பகுதி தனியார் பள்ளியில் கடந்த, 15 ஆண்டுகளாக பஸ் டிரைவராக பணிபுரிகிறார். கடந்த, 18ம் தேதி வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டு சென்ற சேகர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி குமுதா ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை