உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சூளாங்குறிச்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

சூளாங்குறிச்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகில், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நடப்பு கல்வியாண்டில் நடந்த தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீத வருகை புரிந்த 17 பேருக்கு மேலாண்மை குழு கல்வியாளர் மோகன் பரிசு மற்றும் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அலெக்சாண்டர், தமிழ்ச்செல்வி, கித்தேரி, சுகுணா, ரம்யா, நிர்மலா, சிவராமன், அலமேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை